மாயமான அர்ஜெண்டினா நீர்மூழ்கிக் கப்பல்: 44 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை

மாயமான அர்ஜெண்டினா நீர்மூழ்கிக் கப்பல்: 44 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை

1 mins read

பியுனோஸ் ஏரிஸ்: அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்ற வாரம் மாயமாய் மறைந்த அர்ஜெண்டினா நீர்மூழ்கிக் கப்பல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அக்கப்பலில் சென்ற சிப்பந்திகள் 44 பேரை உயிருடன் மீட்க முடியும் என்று நம்பிக்கை தற்போது தகர்ந்துவிட்டது. காரணம் காணாமல்போன அந்த நீர்மூழ்கிக் கப்பல் பற்றி அர்ஜெண்டினா கடற்படைக்குக் கிடைத்த ஆகக் கடைசி தகவல் அக்கப்பலில் சென்றவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்துவ தாக அர்ஜெண்டினா கூறுகிறது. 'ஏஓர்ஏ சான் ஜுவான்' எனும் நீர்மூழ்கிக் கப்பல் சென்ற வாரம் புதன்கிழமை ரேடார் திரையி லிருந்து மறைந்ததைத் தொடர்ந்து அக்கப்பல் ஆகக் கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் வியட்னா மைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பின் இரண்டு ஹைட்ரோ ஒலி நிலை யங்கள் கடலுக்கடியிலிருந்து சமிக்ஞையைக் கண்டுபிடித்ததாக அந்த அமைப்பின் பேச்சாளர் என்ரிக் பால்பி கூறினார்.