சீன துறைமுக நகரில் பயங்கர வெடிப்பு; இருவர் மரணம்

சீன துறைமுக நகரில் பயங்கர வெடிப்பு; இருவர் மரணம்

1 mins read

நிங்போ: சீனாவின் கிழக்கு துறைமுக நகரான நிங்போவில் நேற்று பயங்கர வெடிப்பு நிகழ்ந் ததில் இருவர் மாண்டனர். முப் பதுக்கு மேற்பட்டோர் காயமுற்ற தாகவும் கட்டடங்கள் சேதம டைந்ததாகவும் ஊடகங்களும் உள்ளூர் அதிகாரிகளும் கூறி னர். 'காலி'யிடத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதிலும் மேல் விவரங்களை அது தெரிவிக்க வில்லை. எதனால் வெடிப்பு நிகழ்ந்தது என்பதையும் அது குறிப்பிட வில்லை. ஆனால் ஜியாங்பே மாவட்டத் திலுள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த வெடிப்புச் சம்ப வம் நிகழ்ந்ததாக பிபிசி செய்தி கூறியது. வெடிப்பு ஏற்பட்டதற் கான காரணத்தை விசாரிக்க காவல்துறையினர் உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.