மீண்டும் குமுறிய எரிமலை; ஏர்ஏ‌ஷியா விமானங்கள் ரத்து

1 mins read
bab7ffe3-2c52-4fc6-aa6c-5fd1b5b1f2c0
-

ஜகார்த்தா: பாலியின் அகுங் எரிமலை நேற்று கக்கிய சாம்பல் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியதைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் மேல் விமானங்கள் பறக்க அதிகாரிகள் உடனடி தடை விதித்தனர். "இருப்பினும் எரிமலைப் பகுதியி லிருந்து தெற்கே சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாலித் தீவின் விமான நிலையம் மூடப் படவில்லை. ஒருசில விமானப் பயணங்கள் மட்டுமே தடைபட்டன," என்று அதிகாரிகள் கூறினர். தடை விதிக்கப்பட்ட உடனேயே பாலி, லோம்பாக் பகுதிகளுக்கான தனது 32 விமானப் பயணங்களை ரத்து செய்துவிட்டதாக ஏர்ஏ‌ஷியா தெரிவித்தது. மேலும் சில விமான நிறுவனங்கள் தங்களது பயணச் சேவைகளை ரத்து செய்ய நேற்று முன்தினம் இரவில் முன்வந்தன. அதனைத் தொடர்ந்து பல பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டதாக பாலி விமான நிலைய தகவல் அதிகாரி வாயன் அரி கூறினார்.

இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள பெசாகி கோவில் அருகே இருந்து எரிமலையின் சீற்றத்தை நேற்று காணமுடிந்ததாகக் கூறப் பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்