பாகிஸ்தானில் தொடரும் வன்முறை; பலர் மரணம்

பாகிஸ்தானில் தொடரும் வன்முறை; பலர் மரணம்

1 mins read
44f5a41b-5b0d-498b-adfa-7c55ca1dcc53
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதி யில் நேற்று இரண்டாவது நாளாக வன்செயல்கள் நீடித்தன. இஸ் லாமிய கட்சி ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினரை எதிர்த்து மோதலில் ஈடுபட்டு வாகனங் களைக் கொளுத்தியதால் பெரும் பதற்றம் எழுந்தது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத் சமய நிந்தனை செய்துவிட் டதாகக் குற்றம் சாட்டிய டெஹ்ரிக்- =இ=லபாய்க் கட்சி ஆதரவாளர்கள் அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி இருபது நாட்களுக்கு மேலாக குந்தியிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். தலைநகருக்குச் செல்லும் முக்கிய வழிகளை மறைத்து அவர்கள் உட்கார்ந்து முழக்கம் எழுப்பி வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் அவர்கள் திடீரென்று வன் முறையில் ஈடுபட்டனர். அவர் களைக் கட்டுப்படுத்த ஆயிரக் கணக்கான போலிசாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப் பட்டனர். ஆனால், அவர்களையும் போராட்டக்காரர்கள் தாக்கினர். போலிசார் ரப்பர் தோட்டாக்களை யும் கண்ணீர் புகைக் குண்டுகளை யும் பயன்படுத்தி அவர்களைக் கலைக்க முயன்றனர்.

போலிஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் பரவியது. படம்: ஏஎஃப்பி