பெற்றோரைத் தேடி பேருந்தின் அடியில் 80 கி.மீ. பயணம் செய்த சிறுவர்கள்

பெற்றோரைத் தேடி பேருந்தின் அடியில் 80 கி.மீ. பயணம் செய்த சிறுவர்கள்

1 mins read

குவாங்ஸி: பெற்றோரைக் காணவேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் பெயரிடப்படாத 8, 9 வயது சிறுவர்கள் பேருந்தின் அடியில் ஒளிந்துகொண்டு சீனாவின் தென் பகுதியான குவாங்ஸியிலிருந்து பக்கத்து மாநிலமான குவாங்டோங் மாநிலத்திற்குப் பயணம் செய்துள்ளனர். அவர்களின் மெலிந்த உடலமைப்பு பேருந்தின் அடியில் ஒளிந்து கொள்ள ஏதுவாக இருந்தது. சேரும் சகதியுமான மிக மோசமானப் பாதையில் அந்தப் பேருந்து பயணித்த போதும் அச்சிறுவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அன்று மாலையே அச்சிறுவர்களின் உறவினர்களிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் கூறியது.