லண்டன்: மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு (படம்) 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்த 'ஃப்ரீடம் ஆஃப் ஆக்ஸ்ஃபர்ட்' எனும் கௌரவ பட்டம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு உள்ளது. மியன்மாரில் நடந்துவரும் ரோஹிங்யா பிரச்சினையைக் கையாண்ட முறையால் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் பறிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வன்முறையைப் பார்த்து கண்டு கொள்ளாமல் இருப்பவர்களை கௌரவப் படுத்த விரும்பவில்லை என்று ஆக்ஸ் ஃபர்ட் நகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராணுவ சர்வாதிகாரம் நிலவிய போது பல வருடங்களாக வீட்டில் சிறை வாசம் இருந்த திருவாட்டி சூச்சி, தற்போது ராணுவம் பல்லா யிரக்கணக்கான ரோஹிங்யா மக்களைத் துடைத்தொழிக்க வன்முறையில் ஈடுபட்டுவரும் நிலையில் அதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்காமல் இருக்கிறார். அவரின் செய லுக்குக் கண்டனம் தெரி வித்து உலகத் தலைவர்களும் மனித உரிமை அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றனர். ஜனநாயகத்திற்காக பாடு பட்ட காரணத்தால் ஆக்ஸ் ஃபர்ட் நகரம் அந்த கௌரவப் பட்டத்தை திரு வாட்டி சூச்சிக்கு வழங்கி இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் ஆக்ஸ்ஃபர்ட் நகர மன்றத்தில் நடந்த வாக்க ளிப்பைத் தொடர்ந்து மன்றத் தின் கூட்டத்தின்போது அவரிடமிருந்து நிரந்தரமாகப் பட்டத்தை பறிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
துயர் துடைப்பு மையங்களுக்கு பொதுமக்கள் படகுகளில் மீட்புப் பணியாளர்களால் கொண்டுசெல்லப்படுகின்றனர். படம்: பெர்னாமா

