கோத்தா பாரு: கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்த அடைமழையால் மலேசியாவின் கிளந்தான், திரங்கானு போன்ற கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில் 12 வயது காலிட் அல்-வாலிட் ஜுஸாய்மான் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளந்தான் மாநிலத்தில் சுமார் 643 குடும்பங்களைச் சேர்ந்த 2,321 பேர் 45 துயர்துடைப்பு மையங்களுக்குக் கொண்டு செல் லப்பட்டுள்ளனர் என அம்மாநிலத் தின் அரசாங்க இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 1.00 மணி வரை அம்மாநிலத்தின் 4 முக்கிய ஆறு களின் நீர்மட்டம் அபாய நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக சுங்கை கோலோக் நீர்மட்டம் பிற்பகல் 1.00 மணியளவில் 10.30 மீட்டர் அளவை எட்டியுள்ளதாக (நீர்மட்ட அபாய நிலை 9 மீட்டர்) தகவல்கள் கூறுகின்றன. மேலும், சுங்கை காலாஸ் ஆற் றின் நீர்மட்டம் 36.17 மீட்டராகவும் (35மீ) சுங்கை லெபிர் ஆற்றின் நீர்மட்டம் (31மீ) கிராய் ஸ்டெப்சுக்கு அருகேயுள்ள சுங்கை கிளந்தான் ஆற்றின் நீர்மட்டம் 23.99 மீட்ட ராகவும் (22.50) கில்மார்ட் பாலத் திற்கு அருகேயுள்ள சுங்கை கிளந் தான் ஆற்றின் நீர்மட்டம் 14.73 மீட்டராக (14மீ) உயர்வு கண்டுள்ள தாக தகவல்கள் கூறுகின்றன.
துயர் துடைப்பு மையங்களுக்கு பொதுமக்கள் படகுகளில் மீட்புப் பணியாளர்களால் கொண்டுசெல்லப்படுகின்றனர். படம்: பெர்னாமா

