வடகொரியா: அமெரிக்காவை எட்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா: அமெரிக்காவை எட்டும் ஏவுகணை சோதனை

1 mins read

கண்டம்விட்டு கண்டம் பாயும் புதிய வகை ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்து இருப் பதாக நேற்று வடகொரியா கொக் கரித்தது. புதிய ஏவுகணை அமெரிக்கா முழுவதும் பாய்ந்து தாக்கக்கூடியது என்று வட கொரியாவின் அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது. அணுவாயுத நாடாக ஆக வேண்டும் என்ற தன்னுடைய இலக்கை இதன் மூலம் வட கொரியா சாதித்து இருக்கிறது என பியோங்யாங் குறிப்பிட்டது. வடகொரியா பாய்ச்சிய ஹுவாசோங்-15 என்ற புதிய ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந் தது என்று அது கூறியது.

நேற்று அதிகாலை இருட்டில் ஏவுகணை பாய்ச்சப்பட்டது. ஜப்பானிய கடற் பகுதியில் அது இறங்கியது. இதுவரையில் வடகொரியா சோதித்துள்ள எல்லா ஏவுகணை களையும்விட அதிக உயரத்தில் புதிய ஏவுகணை பறந்தது. வடகொரியாவின் இந்தச் செயலை உலகம் கண்டித்தது. வடகொரியாவின் செயலை ஆட் சேபித்து தென்கொரியா உண்மை யான குண்டுகளைப் பயன்படுத்தி பயிற்சி நடத்தியது. அது தனது சொந்த ஏவுகணைகளில் ஒன்றை பாய்ச்சியது. வடகொரியாவின் புதிய ஏவுகணை பற்றி அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சி சிறப்புச் செய்தி வெளியிட்டது.