சிட்னி: தெற்கு ஆஸ்திரேலியாவின் ரிவர்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தவர்களின் சதிவேலையை போலிசார் முறியடித்தனர். அந்த சதித் திட்டம் பற்றி இம்மாதத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் அத்தாக்குதலில் ஈடுபடவிருந்த இரு இளைஞர்களை கைது செய்ய முடிந்தது என்று ஆஸ்திரேலிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவ்விரு இளைஞர்கள் மீதும் அத்தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். 16,18 வயதுடைய அந்த இளைஞர்கள் இருவரும் தற்போது போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த சதித் திட்டத்தில் வேறு எவருக்கேனும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
ஆஸ்திரேலிய பள்ளியில் தாக்குதல் நடத்த சதி; போலிசார் முறியடிப்பு
1 mins read

