கோல திரங்கானு: மலேசியாவில் திரங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். திரங்கானுவில் உள்ள ஓர் ஆற்றில் தவறி விழுந்த ஸுல்ஃபைஸ் ஸுகார்மி என்ற 17 வயது மாணவர் ஆற்று நீரில் மூழ்கி இறந்ததாக பெர்னாமா தகவல் தெரிவித்தது. முன்னதாக 12 வயதுச் சிறுவன் திரங்கானுவில் உள்ள ஒரு கால்வாய்க்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். வெள்ளப்பெருக்கு அதிகரித் திருப்பதால் பாதுகாப்புக் கருதி திரங்கானுவிலிருந்து 2,432 பேரும் கிளந்தானிலிருந்து சுமார் 7,000 பேரும் வெளியேற்றப் பட்டனர். அவ்விரு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் அவர்கள் தங்கி யுள்ளனர்.
மலேசியா, இந்தோனீசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு
1 mins read

