யங்கூன்: மியன்மார் சென்றுள்ள கத்தோலிக்க மதகுருவான போப் ஃபிரான்சிஸ் தலைமையில் யங்கூனில் நேற்று மிகப்பெரிய பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. திறந்த வெளியில் காற்பந்துத் திடலில் அந்தக் கூட்டம் நடந்தது. போப்பாண்டவரைக் காணவும் அவரது உரையைக் கேட்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். முன்னதாக போப் ஃபிரான்சிஸ், தன்னைக் காணத் திரண்டிருந்த மக்களைப் பார்த்து புன்னகையுடன் கை அசைத்தார். கத்தோலிக்க மதகுரு ஒருவர் மியன்மார் சென்றிருப்பது இதுவே முதல் தடவை. மியன்மாரில் சுமார் 700,000 கத்தோலிக்கர்கள் உள்ள னர். "என் வாழ்நாளில் போப்பை நேரில் பார்ப்பேன் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லை," என்று 81 வயது முதியவர் ஒருவர் கூறினார்.
கத்தோலிக்க மதகுருவான போப் ஃபிரான்சிஸ் தலைமையில் யங்கூனில் பிரார்த்தனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து போப் மகிழ்ச்சியுடன் கை அசைக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

