பாலி விமான நிலையத்தில் மீண்டும் சேவைகள் தொடங்கின

பாலி விமான நிலையத்தில் மீண்டும் சேவைகள் தொடங்கின

1 mins read
0871056b-b759-4151-8d93-bbbefe8d0894
-

பாலித் தீவில் உள்ள அகுங் எரிமலையின் சீற்றம் கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாலி விமான நிலையம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் திறக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பாலி விமான நிலையத்தில் நேற்று மாலையிலிருந்து விமான சேவை கள் மீண்டும் தொடங்கின. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பாலித் தீவுக்கான விமான சேவையை நேற்று மாலை தொடங்கியது. SQ948 விமானம் நேற்று மாலை 6.05 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து பாலிக்குப் புறப்பட்டதாகக் கூறப்பட்டது. அதே போல பாலியிலிருந்து SQ947 விமானம் நேற்றிரவு 8 மணியளவில் புறப்படவிருந்ததாகவும் SQ949 விமானம் இரவு 9.45 மணிக்கு புறப்படவிருந்ததாகவும் எஸ்ஐஏ தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து நேற்றிரவு 10.45, 11.45 மணியளவில் எஸ்ஐஏயின் மேலும் இரு விமானங்கள் பாலியிலிருந்து புறப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

பாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப் பட்டதும் விமானம் புறப்படும் நேரம் பற்றி அறிந்து கொள்ள பயணிகள் வரிசையில் காத்திருக் கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்