அன்வார், மகாதீர் மீது விசாரணை: அரச விசாரணை ஆணையம் பரிந்துரை

அன்வார், மகாதீர் மீது விசாரணை: அரச விசாரணை ஆணையம் பரிந்துரை

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் பேங்க் நெகாராவின் அந்நிய செலாவணி இழப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன்னாள் பிரதமர் மகாதீர், அப்போதைய துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் அரச விசாரணை ஆணையத்தின் 528 பக்க விசாரணை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

திசை திருப்பும் வகையிலான அன்றைய நிதியமைச்சரின் கூற்றுக்கு முன்னாள் பிரதமர் அனுமதி அளித்தார் என்று தாங்கள் நம்புவதாக அரச விசாரணை ஆணையம் கூறியது. மேலும், அப்போது பேங்க் நெகாராவின் அந்நியச் செலாவணிக்குப் பொறுப்பு வகித்த நூர் முகமட் யாக்கோபையும் அரச விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 1991-1998ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் அந்நிய செலவாணி வர்த்தகத்தில் பேங்க் நெகாரா 31.5 பில்லியன் ரிங்கிட் இழப்பை சந்திக்க நேர்ந்ததாக விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியது.