பிரிட்டிஷ் பிரதமரை சாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

பிரிட்டிஷ் பிரதமரை சாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் டுவிட்டர் பக்கத் தில் தீவிர வலதுசாரி வீடியோக் களை வெளியிட்டிருந்ததை பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே குறை கூறியதையடுத்து பதிலுக்கு அவரை திரு டிரம்ப் சாடியுள்ளார். "என் மீது கவனம் செலுத்த வேண்டாம். பிரிட்டனில் நடக்கும் ஐஎஸ் பயங்கரவாதத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்," என்று திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தீவிர வலதுசாரி அமைப்பு சினமூட்டும் வகையில் இணையத்தில் பதிவேற்றியிருந்த மூன்று காணொளிகளை திரு டிரம்ப் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயின் பேச்சாளர் ஒருவர், அதிபர் டிரம்ப் இவ்வாறு ஆதரவு தெரிவிப்பது மிகவும் தவறு என்று கூறினார். அமெரிக்காவும் பிரிட்டனும் சிறந்த நட்பு நாடுகளாகும். அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் பதவி ஏற்றபோது அவருக்கு முதன் முதலாக வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தலைவர்களில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயும் ஒருவர். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் வெளியான வீடியோக்கள் தொடர்பில் திரு டிரம்ப், தெரேசா மே இவர்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.