நியூயார்க்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்த தைத் தொடர்ந்து அந்நாட்டுடனான அனைத்து அரசதந்திர மற்றும் வர்த்தகத் தொடர்புகளை அனைத் துலக நாடுகள் துண்டித்துக் கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண் டுள்ளார். வடகொரியாவின் சோதனையைத் தொடர்ந்து நேற்று அவசரமாகக் கூடிய ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலி யுறுத்தியது. வடகொரியாவுக்கு சீனா எண்ணெய் விநியோகம் செய்வதைத் துண்டிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவை கேட்டுக்கொண்டுள்ள தாக ஐநா கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார்.
வடகொரியா சினமூட்டும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க சீனா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று சீன அதிபரிடம் திரு டிரம்ப் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாகவும் நிக்கி ஹேலி கூறினார். மோதல்களை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறிய அவர், எனினும் போர் வெடித்தால் வடகொரியாவின் ஆட்சி "முழுமையாக அழிக்கப் படும்" என்று எச்சரித்தார். வடகொரியாவின் இத்தகைய அத்துமீறல் செயல்கள் இந்த வட்டாரத்தின் நிலைத்தன்மையை சீர்குலைய செய்யும் என்றும் நிக்கி ஹேலி கூறினார்.

