பெஷாவர் கல்லூரியில் தாக்குதல்; 9 பேர் பலி

பெஷாவர் கல்லூரியில் தாக்குதல்; 9 பேர் பலி

1 mins read
b4a47468-a8c9-4d7f-b5f3-06a562ddac93
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ஒரு வேளாண் பயிற்சி கல்லூரிக்குள் துப்பாக்கிக்காரர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் குறைந் தது 9 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 38 பேர் காயம் அடைந்த தாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அத்தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஒரு ரிக்ஷாவில் வந்திறங்கிய புர்காஸ் அணிந் திருந்த மூவர் நேற்றுக் காலை அந்தக் கல்லூரிக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது. தாக்குதல் நடத்திய துப்பாக்கிக் காரர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் பின்னர் தெரிவித்தது.

தலிபான் போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பெஷாவர் கல்லூரியிலிருந்து ஒரு மாணவரை தொண்டூழியர்கள் பத்திரமாக மீட்டனர். படம்: ஏஎஃப்பி