வெள்ளப்பெருக்கு: பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு

வெள்ளப்பெருக்கு: பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு

1 mins read

கோத்தாபாரு: கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து துயர்துடைப்பு மையங் களுக்கு அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கை 14,237 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் பாசிர் மாஸ் வட்டாரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,646 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ள வேளை யில் இந்த மாநிலம் மிக மோச மாகப் பாதிக்கப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது. மாநில அரசாங்கத்தின் தகவலின்படி அம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் இன்னும் அபாய நிலையிலேயே இருக்கிறது என தெரிய வந்துள் ளது. தற்சமயம் கிளந்தானில் சில பகுதிகளில் கனமழை பெய்கிறது என அது மேலும் கூறியது.

இதற்கிடையில் திரங்கானு மாநிலத்தில் வெள்ள நீர் ஓரளவு வடிந்துவிட்ட நிலையில் டுங்குன், மாராங், கோலா திரங்கானு, கோலா நெருஸ் ஆகிய பகுதி களில் துயர்துடைப்பு மையங்கள் மூடப்பட்டு செத்தியூ, பெசுட் ஆகிய இரண்டு துயர்துடைப்பு மையங்கள் மட்டும் தற்சமயம் இயங்கி வருவதாக மாநில தற்காப்புத் துறை உயர் அதிகாரி அடாம் ரஹ்மான் தெரிவித்தார். நிலைமை மேம் பட்டிருந்தாலும், மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் இன்னும் அபாய நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.