வடகொரியாவுடன் உறவை துண்டிக்க ரஷ்யா மறுப்பு

வடகொரியாவுடன் உறவை துண்டிக்க ரஷ்யா மறுப்பு

1 mins read

நியூயார்க்: வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த தைத் தொடர்ந்து அந்நாட்டுடான அனைத்து தொடர்புகளையும் உலக நாடுகள் முறித்துக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுத்துவிட்டது.

அமெரிக்கா வேண்டுமென்றே வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை சினமடையச் செய்து அவர் மீண்டும் அணுவாயுத ஏவு கணைத் திட்டத்தை தீவிரப் படுத்தும்படி தூண்டிவிடுகிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்தது. போர் மூண்டால் வடகொரிய அரசாங்கம் முற்றாக அழிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. அத்துடன் வடகொரியா வுடனான அரசதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு உலக நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

அமெரிக்காவின் அந்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித் துள்ள நிலையில் அதுகுறித்து பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "வடகொரியா வுடனான உறவுகளை முறித்துக் கொள்வதை பாதகமாகவே நினைக்கிறோம். கடும் பொருளி யல் தடைகளை விதித்து வட கொரியாவை சினமடைய தூண்டி விட்டதே அமெரிக்காதான்," என்று கூறியுள்ளார்.