இந்தியாவிடம் $94மி. இழப்பீடு கோரும் பாக்.

இந்தியாவிடம் $94மி. இழப்பீடு கோரும் பாக்.

1 mins read

லாகூர்: இருநாட்டு கிரிக்கெட் ஒப்பந்தத்தைத் மீறியதற்காக பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் மன்றத்திடம் (ஐசிசி) $94 மில்லியனை இழப்பீடாகக் கோரியுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தவுடன் குறிப்பாக 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பைத் தாக்குதல் களுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் விளையாட்டுப் போட்டிகளில் ஒத்துழைப்பதை நிறுத்தி வைத்தது இந்தியா.

மும்பைத் தாக்குதல்களில் 167 பேர் கொல்லப்பட்டனர். அந்த தாக்கு தல்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா குற்றம் சுமத்தியது. கடந்த 2007ஆம் ஆண்டுகுப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தவிதமான போட்டி, நட்புமுறை ஆட்டங்களில் விளையாடிய தில்லை. எனினும் இரு நாடுகளுக்கும் பொதுவான ஓர் இடத்தில் இந்தியாவும் பாகிஸ் தானும் விளையாடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டது.