டாக்கா: பங்ளாதேஷ் நாட்டிற்குச் சென்றிருந்த கத்தோலிக்க சமய குரு போப் ஃபிரான்சிஸ், அங்குள்ள ரோஹிங்யா அகதி களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மியன்மார் பயணத்தின்போது தான் தவிர்த்த 'ரோஹிங்யா' என்ற சொல்லை அவர் தற்போது சொல்லி ரோஹிங்யா அகதி களிடம் மன்னிப்பு கேட்டார். டாக்காவில் ரோஹிங்யா அகதிகளை போப்பாண்டவர் சந்தித்தார். அவர்கள் அனுபவித்த அனைத்து துன்பங்களுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொண் டதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என போப் கூறினார். முஸ்லிம், இந்து, பெளத்த சமயம் மற்றும் கிறிஸ்துவ சமயத் தலைவர்கள் பங்கேற்ற கூட் டத்திலும் போப் ஃபிரான்சிஸ் உரையாற்றினார்.
ரோஹிங்யா அகதிகளை சந்தித்து ஆறுதல் கூறிய போப் ஃபிரான்சிஸ்
1 mins read

