ஹோண்டுராசில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்

ஹோண்டுராசில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்

1 mins read
202084f4-6394-4a23-b3d1-fe75dbf270ab
-

டெகுசிகல்பா: ஹோண்டுராசில் சென்ற வாரம் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு கடந்த சில நாட் களாகவே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் சுமார் 5,000 வாக்குப்பெட்டிகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்றும் எதிர்கட்சி வேட்பாளர் சல்வடோர் நஸ்ரல்லா வலியுறுத்தி வருகிறார். இதனால் அவரது ஆதரவாளர் கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைக்க போலிசார் முயன்றபோது ஏற்பட்ட மோதல் களில் இதுவரை ஒருவர் உயிரிழந்த தாகவும் 20 பேர் காயம் அடைந்த தாகவும் கூறப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினருக்கும் போலிசாருக் கும் கூடுதல் அதிகாரம் வழங்கப் பட்டுள்ள நிலையில் அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டுராஸ் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர். படம்: ஏஎஃப்பி