வரி குறைப்பு மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்

வரி குறைப்பு மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் வரி குறைப்பு மசோதா அமெரிக்க செனட் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 51 உறுப்பினர்களும் எதிராக 49 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அந்த மசோதாவில் பல திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு இறுதியில் மசோதாவை செனட்டர்கள் நிறைவேற்றினர். இது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த முதல் வெற்றியாகும்.

1980-களுக்குப் பிறகு அமெரிக்க வரியில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இது. புதிய வரி விதிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் நடப்புக்கு கொண்டுவர திரு டிரம்ப் விரும்புகிறார். வரி குறைப்பு மசோதா பிரதிநிதிகள் சபையில் சென்ற மாதம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட வரி குறைப்பு மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு அது சட்டமாக்கப்படும். ஆனால் இந்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் குறை கூறி வருகின்றனர். செல்வந்தர்களும் மிகப்பெரிய நிறுவனங்களும் மட்டுமே இந்த வரி குறைப்பால் நன்மை அடைய முடியும் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர்.