ஹவாயியில் அணுவாயுதத் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை ஒலி மீண்டும் சோதனை

ஹவாயியில் அணுவாயுதத் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை ஒலி மீண்டும் சோதனை

1 mins read

வா‌ஷிங்டன்: ஹவாயியில் அணு ஆயுதத் தாக்குதல் ஏற்பட்டால் மக்களுக்கு எச்சரிக்கை எழுப்பும் ஒலி சோதனை நடத்தப்பட்டது. வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையும் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு இடையே இந்த சோதனை மீண்டும் நடந்தது. இதுவரை வடகொரியா பல தடவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை செய்திருக்கிறது. கடந்த மாதம் வரை மட்டுமே ஆறு அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. இயல்பாகவே ஹவாயியில் சுனாமி, இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான எச்சரிக்கை ஒலி சோதனைகள் நடக்கும். இந்த முறை சற்று வித்தியாசமாக ஒலிக்கும் அணு ஆயுத எச்சரிக்கை ஒலி சோதனையோடு அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மக்களையும் சுற்றுப் பயணிகளையும் வீட்டினுள்ளேயே இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண் டுள்ளனர். அணு வாயுதத் தாக்கு தலுக்கான எச்சரிக்கை ஒலிகள் 1980களில் பனிப்போரின் போது சோதனை செய்யப்பட்டன.