அமெரிக்கா: போருக்கான சாத்தியம்

அமெரிக்கா: போருக்கான சாத்தியம்

1 mins read
723631e9-e41a-433a-94f0-5b30fe652955
-

நாளுக்கு நாள் அதிகரிக்கிறது வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் எச்ஆர் மெக்மாஸ்டர், வடகொரியாவின் மிரட்டலைச் சமாளிக்க அவசர கதியில் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறி யுள்ளார். அதே சமயத்தில் போருக்கான சாத்தியம் நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டே இருக்கிறது என்று அவர் எச்சரித்தார். இருப்பினும் ஆயுதங்கள் பிரச்சினைக்குத் தீர்வு ஆகாது என்று தற்காப்பு கருத்தரங்கு ஒன்றில் அவர் கூறினார். வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து எச்ஆர் மெக்மாஸ்டரின் எச்சரிக்கை வெளியாகியிருக் கிறது. அண்மையில் வடகொரியா செலுத்திய ஏவுகணை இதுவரை இல்லாத உயரத்தை நோக்கிப் பறந்தது. பின்னர் அது ஜப்பானிய கடற் பகுதியில் விழுந்தது. ஐநாவின் தீர்மானங்களையும் மீறி அணுவாயுதங்களையும் ஏவு கணைகளையும் வடகொரியா சோதனையிட்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நிலப்பகுதி களையும் தாக்க முடியும் என்று வடகொரியா கொக்கரித்து வரு கிறது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர். படம்: ராய்ட்டர்ஸ்