சோல்: தென் கொரியாவின் மீன்பிடி படகு ஒன்று எண்ணெய்க் கப்பலுடன் மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். தென் கொரியாவுக்கு மேற்கே உள்ள கடலில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் படகு மூழ்கியது என்று தென் கொரிய கரையோரக் காவல்படையினர் தெரிவித்தனர். சியோன்சாங்-1 எனும் மீன்பிடி படகில் மீன்பிடி சுற்றுலாவுக்காக 20 பேர் பயணம் செய்தனர். இவர்களில் இருவர் கடலோடிகள். தென் கொரிய நேரப்படி நேற்றுக் காலை 6.00 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் காலை 5.00 மணி) சுமார் 336 டன் எடை கொண்ட எரிபொருள் கப்பலுடன் படகு மோதியது. இதில் 13 பேர் இறந்தனர். சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகக் கூறப்படுகிறது.
மீன்பிடி படகு பாதி மூழ்கிய நிலையில் உயிர் பிழைத்தவர்களை முக்குளிப்போர் தேடுகின்றனர். படம்: ஏஎஃப்பி

