ஜெருசலம்: இஸ்ரேலில் அரசாங் கத்தின் ஊழலைக் கண்டித்தும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பதவி விலகக் கோரியும் டெல் அவிவ் நகரில் கூடிய ஆயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஊழல் விவகாரத்தில் நெட்டன் யாகு விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. சனிக்கிழமை இரவு திடீரென நகரின் மையப்பகுதியில் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடினர். நெட்டன்யாகுவுக்கு எதிராகவும் அரசு ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு தவணைக் காலத்திற்கு பிரதமர் பொறுப்பை வகித்துவரும் திரு நெட்டன்யாகு இரு சம்பவங் களில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பெரும் பணக்காரர் ஒருவரி டமிருந்து அவர் ஏராளமான நன் கொடைகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது சம்பவத்தில் தம்மை பிரபலப்படுத்தும் வகையில் பரவலான வகையில் செய்திகளை வெளியிடுவதற்காக பத்திரிகை உரிமையாளர் ஒருவருடன் நெட் டன்யாகு உடன்பாடு செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

