சிரியா விமானத் தாக்குதல்களில் 25 பேர் மரணம், பலர் காயம்

சிரியா விமானத் தாக்குதல்களில் 25 பேர் மரணம், பலர் காயம்

1 mins read
4bae9dbb-ca2b-4663-ba2b-e353cfb04c4a
-

சிரியாவில் டமாஸ்கஸ் அருகே போராளிகள் வசம் உள்ள பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாகவும் 75 பேர் காயம் அடைந்ததாகவும் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. சிரியா அதிபர் ஆசாத்தின் விமானப் படை அத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அத்தாக்குதலைத் தொடர்ந்து கட்டட இடிபாடுகளைத் தாண்டி குடியிருப்பாளர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். சென்ற வாரம் ஜெனீவாவில் சிரியா அமைதிப் பேச்சு நடந்த வேளையில் போராளி களுடன் சண்டை நிறுத்தத் திற்கு அரசாங்கப் படை இணங்கியிருந்தது. அதன் பின்னர் அரசாங்கப் படை மீண்டும் குண்டுகளை வீசி தாக்கத் தொடங்கியது. சிரியாவில் கடந்த 6 ஆண்டு களாக நீடிக்கும் உள்நாட்டுச் சண்டையில் 340,000 பேர் கொல்லப்பட்டனர். படம்: ஏஎஃப்பி