இஸ்ரேல் தலைநகர் ஜெருசலம்: எந்த நேரத்திலும் அறிவிப்பு

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலம்: எந்த நேரத்திலும் அறிவிப்பு

1 mins read
a373699e-fe89-4510-902d-df358d53f963
-

இஸ்ரேலின் தலைநகராக ஜெரு சலத்தை அறிவிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரலாற்று உரை இடம்பெறவிருப் பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அத்துடன் டெல் அவிவ் நகரிலிருந்து அமெரிக்கத் தூதர கத்தை ஜெருசலத்திற்கு மாற்று வதற்கான திட்டத்தை வரையத் தொடங்குமாறு தாம் உத்தரவிட் டிருப்பது குறித்து அந்த உரை யில் குறிப்பிடுவார் என அந்த அதி காரிகள் கூறியதாக 'ராய்ட்டர்ஸ்' தெரிவித்தது. தூதரகத்தை இடம் மாற்றம் செய்யும் பணி மூன்று ஆண்டு முதல் நான்காண்டுகள் வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இருந்தபோதிலும் காலக் கெடு எதையும் அவர் விதிக்க வில்லை. ஜெருசலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் தூதரக அதி காரிகள் தங்குவதற்கும் ஏதுவான கட்டடம் எதையும் அமெரிக்க தூதரகத் துறை கண்டறியாததால் தூதரக இடமாற்றத்தை திரு டிரம்ப் தள்ளிவைக்கக்கூடும் என்று தெரி கிறது.

பெத்தலஹேம் மேங்கர் ஸ்குவேர் அருகே அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் படத்தை பாலஸ்தீனர்கள் கொளுத்தினர். படம்: ஏஎஃப்பி