கலிஃபோர்னியா காட்டுத் தீயில் வீடுகள் நாசம், மக்கள் ஓட்டம்

கலிஃபோர்னியா காட்டுத் தீயில் வீடுகள் நாசம், மக்கள் ஓட்டம்

1 mins read
ee95ef87-3c8c-47d4-b127-8009000870f0
-

சான்டியாகோ: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் அதிவேகத்தில் பரவும் காட்டுத் தீயால் நூற்றுக்கணக்கான வீடு கள் நாசமடைந்துள்ளன. மேலும் அனல்பறக்கும் தீப்பிழம்புகளால் ஆயிரக்கணக்கான குடியிருப் பாளர்கள் வீட்டைவிட்டு தப்பி யோடி வருகின்றனர். சென்ற திங்கட்கிழமையன்று வென்டுராவில் 'தாமஸ் ஃபயர்' என்று பெயரிடப்பட்ட காட்டுத் தீ மூண்டது. மறுநாள் மாலைக் குள் 50,000 ஏக்கருக்கு மேற் பட்ட நிலப்பகுதிகளை அழித்து விட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே அவசர நிலை யை அறிவித்துள்ள கலிஃபோர் னியா மாநில ஆளுநர் ஜெர்ரி புரவுன், காட்டுத் தீயிலிருந்து வீடுகளைப் பாதுகாக்கப் போராடும் 1,000க்கும் மேற்பட்ட தீ அணைப்பாளர்களுக்கு உரிய உதவிகளை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

கலிஃபோர்னியாவில் அதிவேகத்தில் பரவும் காட்டுத் தீயால் மலைப் பகுதியில் உள்ள வீடுகள் நாசமடைந்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீ அணைப் பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி