இரட்டை குடியுரிமை; ஆஸ்திரேலிய அரசுக்கு சிக்கல் அதிகரிப்பு

இரட்டை குடியுரிமை; ஆஸ்திரேலிய அரசுக்கு சிக்கல் அதிகரிப்பு

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலிய அரசுக்கு இன்னமும் இரட்டை குடியுரிமை பிரச்சினை தலைவலியாக இருந்துவருகிறது. ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ள பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் நாடாளுமன்றத்துக்கு இப்பிரச்சினை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் புயலைக் கிளப்பிய இரட்டைக் குடியுரிமை பிரச்சினை இரு தரப்பு அரசியல் கட்சிகளையும் பாதித்தன. ஆஸ்திரேலிய சட்டம் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை தடை செய்கிறது. இந்நிலையில் மேலும் ஒன்பது நாடாளுமன்ற உறுப் பினர்கள் இரட்டை குடியுரிமை பிரச்சினையில் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.