கோலா கங்சார்: வடக்கு கிழக்கு விரைவுச் சாலை 249வது கிலோ மீட்டரில் நேற்று டிரெய்லர் மீது பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். சுங்கை பேராக்கி லிருந்து வெளியேறியபோது இரட்டை மாடி பேருந்தின் ஓட்டுநர், சாலையோரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 25 டன் எடையுள்ள டிரெய்லரைக் கவனிக்கத் தவறி விட்டார் என்று தீ அணைப்பு, மீட்பு பிரிவின் பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு முன்பு கடந்த புதன் கிழமை பேராக்கின் கோபெங்குக்கு அருகே வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 41 வயது பேருந்து ஓட்டுநர் என். சஷிகுமார் மீது நேற்று கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டிய தாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதில் 13 பேர் காயம் அடைந்தனர்.
கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதாக தம் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டை என். சஷி குமார் மறுத்துள்ளார். படம்: பெர்னாமா

