மலேசிய பிரதமர் நஜிப்: எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ஆபத்து

மலேசிய பிரதமர் நஜிப்: எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ஆபத்து

1 mins read
20d6ee8e-9e7b-4869-8e52-08396da6a543
-

கோலாலம்பூர்: அம்னோ பொதுக் கூட்டத்தில் கொள்கை உரை யாற்றிய மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீருக்கு எதிராக போர் தொடுக்கும் வகையில் முழக்க மிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைபெறும் பொதுத்தேர்தலில் நாட்டின் தலை விதி நிர்ணயிக்கப்படவிருக்கிறது என்றும் அம்னோ கட்சியினரிடம் அவர் தெரிவித்தார். ஆளும் அம்னோ கட்சியின் தலைவருமான திரு நஜிப், "எதிர்க் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மலேசியாவின் பொருளியல், மலாய், இஸ்லாமுக்கு ஆதரவான கொள்கைகள் பாதிக்கப்படும்," என்றார். "தவறான, பொறுப்பற்ற கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால் நமது மூதாதையர்கள் அயராது உழைத்து உருவாக்கிய அனைத் தையும் நமது கண் முன்பே இழந்து விடுவோம். "சீனர்கள் தலைமையிலான ஜனநாயக செயல் கட்சியினர் மலாய், இஸ்லாமிய உரிமைகளை ஒழித்துக்கட்ட விரும்புகின்றனர்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு நேற்று நடைபெற்ற கடைசி அம்னோ பொதுக்கூட்டத்தில் கொள்கை உரையாற்ற வந்த பிரதமர் நஜிப். படம்: ராய்ட்டர்ஸ்