சோல்: அமெரிக்காவும் தென்கொரி யாவும் மேற்கொண்டுள்ள ஆகப் பெரிய ராணுவப் பயிற்சியும் போருக்கு இட்டுச் செல்லும் அமெரிக்காவின் மிரட்டலும் நிச் சயம் போர் மூளும் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று வட கொரியாவின் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. வடகொரிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், போரின் விளிம்புக்குத் தள்ளும் அமெரிக்க அதிகாரிகளின் பேச்சு வம்புக்கு இழுப்பதாகவும் உள்ளது என்றும் சாடினார்.
"தற்போதைய கேள்வி, எப் போது போர் வெடிக்கும்," என்பதே என்று வடகொரியாவின் அதிகார பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. வடகொரியா அண்மையில் அமெரிக்காவின் நிலப்பகுதிகளை யும் எட்டும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை யை சோதித்தது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த அடாவடித்தனமான செயலை உலக நாடுகளும் கண்டித்துள்ளன. இதையடுத்து வார இறுதியில் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மெக்மாஸ்டர், வடகொரியாவுடன் போருக்கான சாத்தியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது," என்று எச்சரித்தார்.
வடகொரியாவின் ஏவுகணை, அணுவாயுதச் சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்ட ஐநா அரசியல் விவகாரப் பிரிவின் மூத்த அதிகாரி ஜெஃப்ரி ஃபெல்ட்மேன் தலைநகர் பியோங்யாங்கில் வடகொரியாவின் ஆளும் கட்சி மூத்த தலைவர் ரி சு-யோங்கை சந்தித்தார். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐநா தூதர் ஒருவர் வடகொரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. படம்: ஏஎஃப்பி

