இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

1 mins read
f5e4dded-2940-4603-bf46-ec87e5de5328
-

இஸ்ரேலின் தலைநகராக ஜெரு சலத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அங்கீ கரித்ததை அடுத்து, உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கிழக்கு ஜெருசலம் நகரை தங்கள் தலைநகராக்கிக் கொள்ள பாலஸ்தீனர்கள் விரும்புகின்றனர். அவர்களிடம் கலந்துரையாடிய பிறகு ஜெரு சலத்தின் அந்தஸ்து குறித்து முடிவு எடுப்பதே அமெரிக் காவின் நீண்டகால நிலைப் பாடாக இருந்து வந்தது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவால் முஸ்லிம் நாடுகள் அதிருப்தி அடைந் துள்ளன. டெல் அவிவ்வில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் ஜெருசலத்துக்கு இடம் மாறும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார். மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வர இதுவரை பயன் படுத்தப்பட்ட உத்திகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அவற்றை மீண்டும் பயன்படுத்துவதால் பயனில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அதிகாரபூர்வமாக அங்கீ கரிக்கும் நேரம் கனிந்து விட்டதாக அதிபர் டிரம்ப் கூறினார்.