ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் உடன்பாடு

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் உடன்பாடு

1 mins read

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது தொடர்பில் பேச்சைத் தொடங் குவதில் இதுவரை இருந்துவந்த சிக்கல் நீங்கியுள்ளது. பிரிட்டன் வெளியேற்றம் தொடர் பான நிபந்தனைகளில் ஐரோப் பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் நேற்று உடன்பாடு கண்டுள்ளது. எதிர்காலத்தில் இருதரப்பு உறவு மற்றும் வர்த்தகம் தொடர்பில் பேச்சைத் தொடங்க இது வழி விட்டுள்ளது. நேற்று பிரசல்ஸ் சென்று சேர்ந்த பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, பிரிட்டன் வழங்கவிருக்கும் சலுகைகள் பற்றி ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜான் கிளாட் யங்கரிடம் விளக்கிக் கூறிய பின்னர் உடன்பாடு காணப்பட்டது. அயர்லாந்து எல்லை விவகாரம் குறித்து பிரிட்டனில் வியாழக்கிழமை இரவு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து பிரசல்ஸ் சென்று சேர்ந்த பிரதமர் தெரேசா மே, கடுமையான எல்லைக் கோட்பாடுகள் இருக் காது என்று கூறியதுடன் வெள்ளிக்கிழமை உடன்பாடு உறுதி செய்யப்படும் என்று தெரி வித்தார். பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், முன்பு வாழ்ந்தது போல தொடர்ந்து வாழலாம் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் உறுதி கூறினார்.