ஷாங்ஹாய்: சீனாவில் ஈராண்டுகளுக்கு முன்பு ஹெனான் மாநிலத்தில் 39 முதியோர்களின் உயிரைப் பறித்த கங்லேயுவான் தனியார் தாதிமை இல்லத் தீ விபத்து தொடர்பில் 21 பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என சீன நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தீப்பற்றக்கூடிய பொருள்களைக்கொண்டு சட்டவிரோதமாக அந்த முதியோர் இல்லத்தின் கட்டடம் விரிவுபடுத்தப்பட்டதால் விபத்து ஏற்படக் காரணமாக இருந்தது என்று அந்தச் செய்தி நிறுவனம் கூறுகிறது. அந்தத் தாதிமை இல்லத்தின் சட்டப் பிரதிநிதியும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரில் அடங்குவார். அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முதியோர் இல்லத்தில் தீ; 21 பேருக்கு சிறைத் தண்டனை
1 mins read

