பணம் திருடியதற்காக இளைஞரை அடித்துக்கொன்ற கும்பல்

பணம் திருடியதற்காக இளைஞரை அடித்துக்கொன்ற கும்பல்

1 mins read

மலாக்கா: மலேசியாவில் உறவினர் உட்பட மேலும் சிலரால் கொடூரமான முறையில் 16 வயது மாணவரான எம்.அருணாசலத்தை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோகூர் மாநிலம் தங்காக் பகுதியைச் சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர், ரப்பர் குழாயைக் கொண்டு சிலரால் கொடூரமாகத் தாக்கப்படும் காணொளி சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. தன் தாத்தாவின் 4,000 ரிங்கிட் பணத்தைத் திருடியதற்காக அந்த இளைஞர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர் மலாக்கா மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இறந்ததாக தகவல்கள் கூறின. இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.