கோலாலம்பூர்: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலாலம்பூரிலும் ஜகார்த்தா விலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவ்விரு நகரங் களிலும் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பு ஒன்று கூடிய முஸ்லிம் ஆர்ப்பாட்டக் காரர்கள், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். கோலாலம்பூரில் அம்னோ மற்றும் பாஸ் கட்சி தலைமையில் ஒன்றுகூடிய 1,000 பேர் திரு டிரம்ப் அவரது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத் தினர். இதே போல ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத் திற்கு முன்பும் பலர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். துருக்கியில் இஸ்தான்புல் நகரிலும் பாலஸ்தீன ஆதரவாளர் கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலாலம்பூர், ஜகார்த்தாவில் பெரும் ஆர்ப்பாட்டம்
1 mins read

