மலேசிய விமானத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டிய இளைஞர்

மலேசிய விமானத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டிய இளைஞர்

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து கோலா லம்பூருக்கு திரும்பிக் கொண் டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக மிரட்டிய இளைஞர், அந்த விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதை ஒப்புக் கொண்டதாக ஆஸ்திரேலிய ஊடகத் தகவல் தெரிவித்தது. அக்குற்றத்திற்காக இலங்கை யைச் சேர்ந்த 25 வயது மனோத் மார்க்ஸ் என்ற இளைஞருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப் படுகிறது. கடந்த மே மாதம் 31ஆம் தேதியன்று மெல்பர்னிலிருந்து சுமார் 330 பேருடன் புறப்பட்ட MH 128 விமானத்தை மனோத் மார்க்ஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக மெல்பர்ன் மாஜிஸ்திரேடே நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றச் சாட்டை அந்த இளைஞர் நேற்று ஒப்புக் கொண்டதாக நீதிமன்றத் தகவல் கள் கூறின. ஆரம்பத்தில் அந்த இளைஞர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.