வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பானின் புதிய திட்டம்

வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பானின் புதிய திட்டம்

1 mins read

தோக்கியோ: அணுவாயுத மற்றும் ஏவுகணைகள் சோதனைகள் மூலம் வடகொரியா மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் வரை சென்று தாக்கக்கூடிய சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து வருவதால் ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்நிலையில் வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்கும் வகையில் ஜப்பான் அதன் தற்காப்புத் திறனை மேம்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் நீண்ட தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. 900 கி.மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் வலிமை படைத்த இந்த ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து செலுத்த முடியும். அதே போன்று 500 கி.மீ தொலைவு வரை சென்று தாக்கும் காங்ஸ்பெர்க் என்ற ஏவுகணையை நார்வேயிடமிருந்து ஜப்பான் வாங்கவுள்ளது. இத்தகவலை ஜப்பானிய ராணுவம் தெரிவித்துள்ளது.