நஜிப்: அம்னோ துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிருக்கும்

நஜிப்: அம்னோ துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிருக்கும்

1 mins read

நஜிப்: அம்னோ துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிருக்கும் கோலாலம்பூர்: மலேசியாவில் அடுத்து வரும் அம்னோ கட்சித் தேர்தலில் அக்கட்சியின் மூன்று துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிருக்கும் என்று அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். இருப்பினும் திரு ஹிசாமுதின் ஹுசேனுக்கு ஆக அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் திரு நஜிப் கூறினார். அம்னோ கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இரு உயர் பதவிகளுக்கு போட்டியிருக்கக்கூடாது என்ற தீர்மானம் கட்சியின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதே என்று திரு நஜிப் விளக்கம் அளித்தார். அம்னோ பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக எடுத்த முடிவு அது என்றும் அவர் கூறினார். தேவை ஏற்பட்டால் கட்சி அரசியலமைப்பு சட்டத்தை அம்னோ பேரவை மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார். அம்னோ இரு உயர் பதவிகளுக்கு போட்டியிட ஒரு வேட்பாளர் தீர்மானித்தால் என்ன நடக்கும் என்று கேட்கப்பட்டதற்கு அது செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்படும் என்றும் திரு நஜிப் கூறினார்.