டெல் அவிவ்: காஸா பகுதியி லிருந்து மூன்று ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி வீசப் பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸ் போராளிகளின் இலக்குகள் மீது நேற்று தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் குழுவினரின் ஆயுதக் கிடங்குகள் மீது இஸ்ரேலிய ராணுவம் குண்டுகளை வீசித் தாக்கியதில் இருவர் கொல்லப் பட்டதாக காஸா மருத்துவமனை தெரிவித்தது. இஸ்ரேலிய குண்டு வீச்சில் ஹமாஸ் போராளிகளின் ஆயுதக் கிடங்குகள் தரைமட்ட மாகின. இடிபாடுகளிலிருந்து இரு பாலஸ்தீனர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ஷிஃபியா மருத்துவமனை கூறியது. இஸ்ரேலியத் தாக்குதலிலும் துப்பாக்கிச் சண்டையிலும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை பின்னேரம் 3 ஏவுகணைகள் இஸ் ரேலிய பகுதியை நோக்கி வீசப் பட்டதாகவும் அவற்றுள் ஒரு ஏவு கணையை இஸ்ரேலிய ராணுவம் பாதி வழியில் இடைமறித்து அழித் ததாகவும் இஸ்ரேல் கூறியது.
காசா பகுதியில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் போராளிகளின் ஆயுதக் கிடங்குகள் சேதம் அடைந்தன. அந்த இடத்தில் பாலஸ்தீனர்கள் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

