ஜெருசலத்தை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரிக்கும் அமெரிக்கா வின் அறிவிப்பு குறித்து விவாதிப் பதற்காக துருக்கியில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்புக் கூட்டத்தில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் பங்கேற்க இருக்கிறார். எதிர்வரும் புதன்கிழமை துருக்கியின் அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் ஏற்பாடு செய்திருக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதால் ஆண்டுதோறும் சிங்கப்பூர் தலைவர்களுடன் நடத்தும் கூட்டத்தை தள்ளி வைப்பதாக நேற்று நடைபெற்ற அம்னோ கூட்டத்தில் பேசிய திரு நஜிப் கூறினார். டிசம்பர் 13ஆம் தேதி இஸ்தான்புல்லில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் மலேசியா வின் கருத்துகள் முக்கிய மானவை என்பதால் அதில் பங்கேற்க திரு எர்டோகன் தமக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் ஆண்டுதோறும் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்க வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்ட திரு நஜிப், அந்தச் சந்திப்பை மற்றொரு நாளுக்குத் தள்ளி வைப்பது பற்றி பிரதமர் லீயுடன் தொலைபேசி வழியாக உரை யாடினேன்,' என்று கூறினார்.
நஜிப்: பிரதமர் லீயுடனான சந்திப்பு தள்ளிவைப்பு
1 mins read

