கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவ கத்தைப் புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளங்களில் மக் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் நாட்டிற்கு அந்த நிறுவனம் நிதியுதவி வழங்கி வருவதாக அதன் மீது சிலர் குற்றஞ்சாட்டி வருவது அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. டுவிட்டரில் வெளிவந்த அந்தத் தகவலை 320 முறை ரி-டுவிட் செய்யப் பட்டுள்ளதாகவும் 138 முறை லைக் செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த மலேசியா மெக்டோனல்ட்ஸ் நிறு வனம், ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மலேசிய மெக்டோனல்ட்ஸ்: இஸ்ரேலுடன் இணைத்துக் கூறப்படும் தகவல் பொய்
1 mins read

