ஷா ஆலாம்: சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதின் இட்ரிஸ் ஷாவுக்கும் ஜனநாயக செயல் கட்சி உறுப்பினர் ஸாயிட் இப்ராகிமுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவும் வேளையில் சுல்தானுக்கு ஆதர வாக ஷா ஆலம் நகரில் ஏராள மானோர் ஒன்றுதிரண்டனர். வழக்கமாக அமைதியாகக் காணப்படும் அந்த குடியிருப்புப் பகுதி நேற்று ஆரவாரம் மிக்க இடமாக மாறியிருந்தது. அங்கு வந்திருந்தவர்களில் பெரும் பாலானோர் சிவப்பு நிற 'டி' சட்டைகளை அணிந்திருந் தனர். "எங்கள் சுல்தானை அவமானப்படுத்த வேண்டாம், சிலாங்கூரைவிட்டு ஸாயிட் வெளியேற வேண்டும்," என்ற வாசகங்கள் அடங்கிய அட்டை களை பலர் வைத்திருந்தனர். தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளின் தலை வர்கள் அந்தப் பேரணியில் உரையாற்றினர். சுல்தானுக்கு எதிராக ஸாயிட் டுவிட்டரில் வெளியிட்ட கருத் திற்கு அவர்கள் கண்டனம் தெரி வித்தனர்.
சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடந்த பேரணியில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். படம்: பெர்னாமா

