மணிலா: அடுத்த 25 ஆண்டுகளில் பிலிப்பீன்ஸ் தலைநகரான மணிலா செயலிழந்த நகரமாக மாறிவிடும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் கடுமையான போக்குவரத்து நெரிசல் என்று குறிப்பிட்டிருக்கும் டுட்டர்டே இதனைக் கருத்தில் கொண்டு மணிலாவுக்கு வெளியே இருக்கும் பம்பாங்கா போன்ற நகரங்களை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் சில ஆண்டுகளில் முதலீடு செய்வதற்கு மணிலா தகுதியான நகரமாக இருக்காது என்றும் டுட்டர்டே தெரிவித்திருக்கிறார்.
அதிபர் டுட்டர்டே: 25 ஆண்டுகளில் மணிலா செயலிழந்த நகரமாகிவிடும்
1 mins read

