எந்திர மனிதனின் கைகள், விரல் ரேகைப் பதிவுக் கருவிகள், முக அங்கீகரிப்பு தொழில்நுட்பம் ஆகி யவற்றைப் பயன்படுத்தும் தானி யக்க முறை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் பரிசோ திக்கப்பட்டு வருகிறது. எல்லைக் கட்டுப்பாடுகளில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் எண்ணி யுள்ளதால் இந்தப் புதிய உயர் தொழில்நுட்ப முறை சோதனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. Apics எனப்படும் கார் பயணி தானியக்க அனுமதி முறை மேற் சொன்ன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும். சோதனையில் இது வெற்றிபெறுமாயின் உலகத்தி லேயே Apics முறையைப் பயன் படுத்தும் முதல் நாடாக சிங்கப்பூர் திகழும் என்று அதிகாரிகள் குறிப் பிடுகின்றனர். எதிர்காலத்தில் இந்த தானி யக்க முறை எவ்வாறு செயல்படும் என்பதை முன்மாதிரிக் கருவிகளு டன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கினர். குடிநுழைவு சோத னைச் சாவடி ஆணையம், உள் துறை அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங் கேற்று விளக்கினர்.
புதிய தானியக்க முறை வருங் காலத்தில் எவ்வாறு செயல்படும் என்பது முன்மாதிரிக் கருவிகள் மூலம் செய்தியாளர் களுக்கு விளக்கிக் காட்டப் பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

