போலி பால் மாவு: விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

போலி பால் மாவு: விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

1 mins read
448637bd-2fcc-4b2a-bf92-f6b919545a9f
-

ஜோகூரில் நடத்தப்பட்ட சோத னைகளில் போலி பால் மாவு டப் பாக்களை அதிகாரிகள் கைப் பற்றினர். வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் குழந்தைகளுக்கான பால் மாவு 210 பெட்டிகள் பிடிபட்டதாகவும் அவை போலி என சந்தேகிக்கப் படுவதாகவும் ஜோகூர் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கைருல் அன்வார் பச்சோக் தெரிவித்தார். பிடிபட்ட பால் மாவின் மதிப்பு 42,000 ரிங்கிட் (S$13,916). சந்தையில் போலி பால் மாவு பொருட்கள் இருப்பது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே பால் மாவு தயாரிப்பாளர்கள் சந் தேகம் எழுப்பி வந்ததாகவும் திரு கைருல் கூறினார். விசார ணை மேற்கொள்ளப்பட்ட பின் னர் இஸ்கந்தர் புத்ரி, தாமான் முத்தியாரா ரினி, தாமான் ஓர் கிட், தாமான் டாயா, தாமான் நூசா பெஸ்தாரி ஆகிய இடங் களில் உள்ள கடைகளில் கடந்த வியாழக்கிழமை சோதனை மேற் கொள்ளப்பட்டது.

சோதனைக்குள்ளான கடை ஒன்றில் ஏற்கெனவே வாங்கப் பட்டிருந்த பால் மாவை உட் கொண்ட ஒரு குழந்தை கடுமை யாக வாந்தி எடுத்ததாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், அது போலி மாவு என தமக்குத் தெரியாது என்று அதிகாரிகளிடம் அந்தக் கடை யின் முதலாளி கூறியுள்ளதாக 'த ஸ்டார்' குறிப்பிட்டது.

கைப்பற்றப்பட்ட போலி பால் மாவு பாக்கெட்டுகளைக் காட்டும் அதிகாரிகள். படம்: பெர்னாமா