வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி செனட்டர்களான கோரி புக்கரும் ஜெப் மெர்கிலியும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஜனநாயகக் கட்சி செனட்டர் அல் ஃபிராங்கன் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதைத் தொடர்ந்து அவர் கடந்த வியாழக்கிழமை பதவி விலகினார். அப்படி இருக்கும்போது திரு டிரம்ப் ஏன் பதவி விலகக்கூடாது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். திரு டிரம்ப்பிற்கு எதிராக குறைந்தது 17 பெண்கள் புகார் கூறியுள்ளனர். திரு டிரம்ப்பினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர்கள் கூறியுள்ளனர்.
டிரம்ப் பதவி விலக இரு செனட்டர்கள் வலியுறுத்து
1 mins read

