ஐரோப்பாவில் பனிப்பொழிவு: விமான, ரயில் பயணிகள் பலர் தவிப்பு

ஐரோப்பாவில் பனிப்பொழிவு: விமான, ரயில் பயணிகள் பலர் தவிப்பு

1 mins read

லண்டன்: மிக மோசமான பனிப்பொழிவால் ஐரோப்பாவின் பல பகுதிகளில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வான்வழி, ரயில், தரைவழி போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 330 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் வட ஐரோப்பிய நாடுகளில் கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 0 டிகிரிக்கும் கீழ் தட்பவெப்ப நிலை இருப்பதால், கடுமையான குளிர் நிலவுகிறது. பரபரப்பான ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் கடுமையான பனிப்பொழிவால் விமானப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு 330 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

டுசெல்ட்ரோப் விமான நிலையம் பிற்பகலில் 4 மணி நேரம் மூடப்பட்டது. அதேவேளையில், வடமேற்கு ரின்லி வெஸ்ட்பாலியா மாநிலத்தில் ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இங்கிலாந்தில் 2வது பெரிய நகரமான பர்மிங்காமில் உள்ள விமான நிலையமும் பனிப்பொழிவு காரணமாக நேற்று முன்தினம் காலை விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்தது. விமான ஓடு தளத்தில் பனி கொட்டிக் கிடந்ததால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.